ஸ்ரீவைகுண்டம், ஏப்ரல் - 3, நவதிருப்பதி அருகில் சுவாமி நம்மாழ்வார் பிறந்த அப்பன் கோவிலில் இன்று கருடசேவை நடந்தது.
அப்பன் கோவில் சுவாமி திருவேங்கடத்தப்பன் கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று முடிவுறும் வகையில் 5 நாட்கள் உற்சவம் நடக்கிறது.
அதன்படி இன்று காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம் 7.15 மணிக்கு திருமஞ்சனம் 8.30 மணிக்கு தீபாராதனை. 10 மணிக்கு சுவாமி திருவேங்கடத்தப்பன் தாயார் ஸ்ரீ தேவி பூதேவியுடன் முன் மண்டபத்தில் எழுந்தருளி திருக்கல்யாணம் நடந்தது.
திருமாங்கல்ய தாரணம் முடிந்தவுடன் தீர்த்தம், மஞ்சள் கயிறு, குங்குமம் மற்றும் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 6.30 மணிக்கு சுவாமி திருவேங்கடத்தப்பன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார் பின்னர் மாட வீதி புறப்பாடு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அரையர் ஸ்வாமிகள் சம்பத், சாரங்கன், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment