திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி சத்ரு சம்ஹார பூஜை மற்றும் சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது, தீய சக்திகள் அழிந்து எடப்பாடி பழனிச்சாமி கை காட்டுபவரே டெல்லியில் பிரதமராக வேண்டும் என திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை செய்து வழிபாடு நடத்தினேன். வெள்ளத்திற்கு பிறகு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. வியாபாரிகள், உப்பளத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் அதிக அளவு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது தூத்துக்குடி, ஏரல், திருச்செந்தூர் ஆகிய பகுதிகள் தான். மக்கள் இயல்புநிலை திரும்புவதற்கு ஐந்தாண்டுகள் ஆகும். சொத்து வரி, மின்சார கட்டணம் ஆகியவற்றில் சலுகைகள் வழங்கவில்லை. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பொய்யான வாக்குறுதிகளுக்கு கொடுத்து வெற்றி பெற்று அமைச்சராகி உள்ளார்.
திருச்செந்தூர் கோவிலை திருப்பதி இணையாக கொண்டு வருவேன் என தெரிவித்தார். கடந்த ஆட்சியில் இருந்த அடிப்படை வசதி கூட தற்போது இல்லை. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா கொடுத்த பிச்சையில் மந்திரியாக இருந்து கட்சி தாவினார். அவர் அணிந்திருக்கும் சட்டை, உடம்பில் ஓடும் ரத்தம் எல்லாம் அதிமுக உடையது. ஆனால் நன்றி கேட்டு பேசி வருகிறார். இந்த தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதை எங்களுடைய இலக்கு.
பாஜக, அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என காத்திருந்து எதிர்பார்த்து வந்தார்கள். அதுவரை டி.டி.வி. தினகரனை எந்த ஒரு பாஜக மேடையிலும் ஏற்றவில்லை. ஜெயலலிதா இடத்தை யாராலயும் பிடிக்க முடியாது என தெரிவித்தார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.


No comments:
Post a Comment