நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினருக்கான தபால் ஓட்டுப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 15 April 2024

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினருக்கான தபால் ஓட்டுப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.


காவல்துறையில் பணியாற்றக் கூடியவர்கள் தேர்தல் நாளில் பணியில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் முன்கூட்டியே  ஓட்டுக்கள் போடுவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த 85 பேர்  மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 660 பேர் என மொத்தம் 745 காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு இன்று மற்றும் நாளையும் நடைபெற உள்ளது. 

அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவுப்படி காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் தங்களது தபால் வாக்குகளை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர். 

No comments:

Post a Comment

Post Top Ad