பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவில் தெப்போற்சவம்.
தாமிரபரணி ஆற்றின் கரையிலுள்ள நவதிருப்பதி கோவில்களில் 6 வது பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவில். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் துவங்கி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 4 ந்தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் துவங்கியது. 12 ம் நாள் திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு தெப்பம் நடந்தது. காலை 7.15 மணிக்கு விஸ்வரூபம் 8 மணிக்கு திருமஞ்சனம். 9.30 மணிக்கு நித்தியல். மாலை 5 மணிக்கு சாயரட்சை. 6.30 மணிக்கு சுவாமி மாயக்கூத்த பெருமாள் அலமேலு மங்கை குளந்தைவல்லி தாயார்களுடன் கருட மண்டபத்தில் எழுந்தருளினார் பின்னர் அலங்காரம் செய்து தோளுக்கினியானில் புறப்பட்டு 8 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளி தீபாராதனை காட்டப்பட்டது. 12 சுற்று முடிந்து வீதி புறப்பாடு நடைபெற்றது.
நாலாயிர திவ்ய பிரபந்தங்களை அரையர் சம்பத். சாரங்கன் ஸ்வாமிகள் அண்ணாவியார் பாலாஜி ஸ்வாமி ஆத்தான் கீழத்திருமாளிகை சுவாமிகள் ராமானுஜம் உட்பட பலர் சேவித்தனர். பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்தல அர்ச்சகர் வெங்கடேசன், சுந்தரம், பிச்சைமணி,சுந்தர நாராயணன், ஸ்தலத்தார்கள் சீனிவாசன், ராமானுஜம்,ஸ்ரீதர், ஸ்ரீகாரியம் அஸ்வின், அரவிந்த் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் சிவலோநாயகி, கள்ளப்பிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாச அறக்கட்டளை பொறியாளர் கார்த்திக், மேற்பார்வை செயல் அலுவலர் பரகால சிங்கன், களஅலுவலர் பத்மநாபன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று புஷ்ஞ்சாலி நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை குளந்தைவல்லி தாயார் கைங்கர்ய சபாவினர் மற்றும் நிர்வாகம் செய்திருந்தனர்.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment