பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2024ஐ முன்னிட்டு, வருகின்ற 19.04.2024 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதைத்தொடர்ந்து, குறுக்குச்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஏற்படுத்த பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி,இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், மணியாச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment