தூத்துக்குடி மாவட்டத்தில் பணி புரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வெளி மாவட்டத்தில் உள்ள தங்களுக்கான வாக்குகளை தபால் வாக்கும் மூலம் பதிவு செய்யும் விதம் குறித்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பயிற்சி வகுப்பு நடந்தது.
இந்த பயிற்சி வகுப்பிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சொர்ண ராஜ் தலைமை வகித்து பயிற்சி வகுப்பினை நடத்தினார். தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட காவல் தேர்தல் கட்டுப்பாட்டு அறை டிஎஸ்பி சந்திரதாசன், ரூரல் டிஎஸ்பி ராஜா சுந்தர், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜு, எடுத்து துரைத்தனர்.
பயிற்சியில் வெளிமாவட்டத்தில் இருந்து தூத்துக்குடியில் பணி செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சுமார் 100க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment