உடன்குடி சாயக்கார குடி தெரு; ஸ்ரீ வண்டிமறிச்சி அம்மன் கோவில் கொடை விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 8 April 2024

உடன்குடி சாயக்கார குடி தெரு; ஸ்ரீ வண்டிமறிச்சி அம்மன் கோவில் கொடை விழா.


திருவிளக்கு பூஜையில்  திரளானோர் பங்கேற்பு உடன்குடி சாயக்காரக்குடி தெருவில்  ஸ்ரீ வண்டி மறிச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கொடை விழா கடந்த 2ம் தேதி கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து திங்கட்கிழமை காலை7 மணிக்கு கணபதி பூஜை, யாகசாலை பூஜை,காலை 10:30 மணிக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. 

மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர். இரவு 8 மணிக்கு கன்னியான்ஆட்டம் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, கும்பம் திருவீதி உலா நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை காலை பால்குட ஊர்வலம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை, இரவு 7 மணிக்கு கனியான் ஆட்டம், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாரதனை நடைபெற உள்ளது. புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு படைப்பு ஆராதனை, அதிகாலை 4 மணிக்கு மஞ்சள் நீராடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


விழாவையொட்டி திங்கட்கிழமை இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் முத்துராமலிங்க குருக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர். 

No comments:

Post a Comment

Post Top Ad