நாசரேத் அருகே மனைவியை அவதூறாக பேசியவரை அரிவாளால் வெட்டியா கணவர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 8 April 2024

நாசரேத் அருகே மனைவியை அவதூறாக பேசியவரை அரிவாளால் வெட்டியா கணவர்.


நாசரேத் அருகே உள்ள பெத்தானியா நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சரவணன் (25) . கூலித்தொழிலாளி. பக்கத்து வீட்டைச்சேர்ந்தவர் காளியப்பன் மகன் மாரிமுத்து (30). இவர் வீட்டில் வைத்து கோழி வியாபாரம் செய்து வருகிறார் ‌. இந்த கோழிகள்  அடிக்கடி காணாமல் போனது.இது தொடர்பாக மாரிமுத்துவுக்கும், சரவணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

 

நேற்று முன்தினம் இரவு (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும்  அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மாரிமுத்து   மனைவியை சரவணன் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, சரவணனை அரிவாளால் வெட்டினார். காயமடைந்த அவர் , சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 


இதுகுறித்து சரவணனின் தாய் ராமக்காள்  நாசரேத் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வைகுண்ட தாஸ் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விசாரணை நடத்தி மாரிமுத்துவை கைது செய்தார்.


 நாசரேத் நிக்சன் செய்தியாளர் 

No comments:

Post a Comment

Post Top Ad