தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாங்குடி கிராமத்தில் திமுக நிர்வாகிகள் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள கிராம மக்களை சந்தித்து திமுக அரசின் சாதனைகளை விளக்கி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகள் முழுவதும் திமுகவிற்கு வாக்களிப்போம் என்ற ஸ்டிக்கரை ஒட்டினர். இதில் மத்திய ஒன்றிய திமுக பொருளாளர் மதுரம் செல்வராஜ், கிளை செயலாளர் ஜெயபால், திமுக பிரமுகர் முருகேசன், இளைஞர் அணியினர் பாபு, கிறிஸ்டோபர், கனக செல்வன், கிருபாகரன், மகளிர் அணி நிர்வாகி பெல்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment