ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 12 April 2024

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல்.

ஸ்ரீவைகுண்டம், ஏப்ரல் 12.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது.


ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் தாமிரபரணி நதியின் கரையோரத்தில் பெருமாளுக்குரிய நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளது. 

நவதிருப்பதிகளில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு 'குரோதி வருஷ பஞ்சாங்கம்'' வாசித்தல் நிகழ்ச்சி நேற்று இரவில் நடைபெற்றது.


முன்னதாக காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனமும், புதிய வஸ்திரம் சாத்துதலும், 10 மணிக்கு    நாலாயிரதிவ்ய பிரபந்த கோஷ்டியும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்குதலும் நடைபெற்றது. 

தொடர்ந்து மாலை  5.30 மணிக்கு தாயார்கள் வைகுண்டநாயகி, சோரநாதநாயகி, ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் உற்சவர் கள்ளபிரான்ஸ  சுவாமி சயனக்குறட்டிற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன்பின்பு மாலை  7 மணியளவில் திருவாராதனமநடந்தது, 

ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி குரோதி வருஷ பஞ்சாங்கம்'' வாசித்தலும் நடைபெற்றது. அதில் குரோதி ஆண்டில் உலகில் கொள்ளையும் விளச்சல் குறைவாகவும் இருக்கும். நல்ல சுப காரியங்கள் நடக்கும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ் நாராயணன். அனந்த பத்மநாபன். சீனு. ஸ்தலத்தார்கள் சீனிவாசன், கண்ணன் ஸ்ரீனிவாசன், தேவராஜன் ஸ்ரீகிருஷ்ணன் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் ஸ்தலத்தார்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad