சாத்தான்குளம் கலைக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 April 2024

சாத்தான்குளம் கலைக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி.


சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர்  கலைவாணி ஆலோசனையின் பேரில்  வாக்காளர் விழிப்புணர்வு கோலப் போட்டி மற்றும் வாசகம் எழுதும் போட்டி ஆகியவை நடத்தப்பட்டது. 

வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை தலைமை வகித்தார்.  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை)  சின்னதுரை மற்றும் துணை முதல்வர் முனைவர் ஜமுனாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு கோலங்களை போட்டிருந்தனர். கோலத்தினை அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் பார்வையிட்டனர், மேலும் மாணவிகள் இலவச தொலைபேசி எண் 1950 வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், மகளிர் திட்ட வட்டார மேலாளர் ரோஸ்லின் ,வட்டார ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமாரி,புதுக்குளம் ஊராட்சி செயலர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  

தேர்தல் குழு ஒருங்கிணைப்பாளர்களான கணிதவியல் துறை உதவி பேராசிரியர் பிரேசில், உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் குமார்   ஒருங்கிணைத்திருந்தனர்.


- நாசரேத் நிக்சன் செய்தியாளர் 

No comments:

Post a Comment

Post Top Ad