பொத்தகாலன்விளையில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு காங்கிரசார் வாக்கு சேகரித்தனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 April 2024

பொத்தகாலன்விளையில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு காங்கிரசார் வாக்கு சேகரித்தனர்.


பொத்தகாலன்விளையில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து காங்கிரசார் வியாழக்கிழமை  வாக்கு சேகரித்தனர். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி எம்பி போட்டியிடுகிறார். தேர்தல் நேரம் நெருங்குவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் ஒன்றியம்   சாஸ்தாவிநல்லூர்  ஊராட்சிக்குள்பட்ட  பொத்தகாலன்விளையில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில்  சாஸ்தாவிநல்லூர் முன்னாள் கூட்டுறவு கடன் சங்கத் தலைவரும், ஐஎன்டியுசி  மாநிலச் செயலர்  லூர்து மணி தலைமையில் காங்கிரஸார்  வீடு  வீடாக சென்று  வியாழக்கிழமை  வாக்கு சேகரித்தனர்.

மாவட்ட ஐஎன்டியுசி மாவட்ட துணைத் தலைவர் அருள் அமுதன், தெற்கு வட்டார காள்கிரஸ் துணைத் தலைவர்  அன்னகணேசன்,தெற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் அலெக்ஸ் ராஜா, ஐஎன்டியுசி மாவட்ட பொதுச் செயலாளர் மிக்கேல் ஸ்ரீதர் சின்ன ராஜா, தெற்கு வட்டார செயலாளர் லாரன்ஸ் மகிழன் ராஜா ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். 


இதில்  கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள்சௌக்கிய புரம் பில்லி கிரகாம்., பொத்த காலன் விளை சந்தன திரவியம், சுப்பிரமணியபுரம் மில்டன், அய்யர்விளை தங்கராஜ், சாலைப்புதூர் ராகவன். சொக்கன்குடியிருப்பு ஜெயராஜ், ஒன்றிய திமுக பிரதிநிதி, சித்திரை, கொளுந்தட்டு கிராம காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சித்திரை. சாத்தான்குளம் தெற்கு வட்டார மகிளா காங்கிரஸ் செயலாளர் ரூபி. போலையர்புரம் மகளிர் காங்கிரஸ் தலைவி ஏஞ்சல் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜஸ்டின், பொன்ராஜ், அந்தோணி, குமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


- நாசரேத் நிக்சன் செய்தியாளர் 

No comments:

Post a Comment

Post Top Ad