சாத்தான்குளம் அருகே முதலூர் தூய மிகாவேல் ஆலயம் சேகர கமிட்டி சார்பில் குளோரிந்தா தையல் பயிற்சி மையம் தொடக்க விழா நடைபெற்றது. சேகர குருவானவர் செல்வன் மகாராஜா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்..தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும், ஆலய பாஸ்ட்ரேட் பொருளாளர் சாந்த ராஜா ரத்தினராஜா, பாஸ்ட்ரேட் செயலாளர் மோசஸ் சாந்தராஜ், தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் எடிசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலய அசன கமிட்டி பொருளாளர் பாக்யராஜ் வரவேற்றார்.
இதில் ஆலய கமிட்டி உறுப்பினர்ஜான்சன், தையல் பயிற்சியின் ஆசிரியர்கள் ஜெயா சாந்தராஜ் ,.சாந்தி ஆமோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆலய அசன கமிட்டி செயலாளர் சுரேஷ் ஜேக்கப் நன்றி கூறினார்.
- நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment