திருப்புளிங்குடி - காய்சினவேந்த பெருமாள் கோவில் கருடசேவை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 5 April 2024

திருப்புளிங்குடி - காய்சினவேந்த பெருமாள் கோவில் கருடசேவை.

ஶ்ரீவைகுண்டம், ஏப்ரல் - 5, ஸ்ரீவைகுண்டத்தைச் சுற்றி உள்ள நவதிருப்பதி கோவில்களில்  திருப்புளியங்குடி 3வது திருப்பதி ஆகும். 


ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். மார்ச் 31 ந்தேதி கொடியேற்றம் நடந்தது. நேற்று 5 ஆம் திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடந்தது. 

காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 7 மணிக்கு நித்தியல். 7.30 மணிக்கு உற்சவர்  வீதி உலா நடந்தது. காலை 11.30 மணிக்கு  சிறப்பு திருமஞ்சனம். 12 மணிக்கு தீபாராதனை. நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் அத்யாபகர்கள் சீனிவாசன். நரசிம்மன்.ஆதிநாதன். சடகோபன். பெரிய திருவடி ஆகியோர் பிரபந்தங்கள் சேவித்தனர். சாத்துமுறை, தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 


மாலை 6 மணிக்கு சாயரட்சை பின்னர் உற்சவர் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். அர்ச்சகர் ரமேஷ்.l, கோபாலகிருஷ்ணன் கருட வாகனத்தில் காய்சினி வேந்தன்  அலங்காரம் செய்தனர். இரவு 10 மணிக்கு உற்சவர் காய்சினி வேந்தன் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.  தினசரி காலை பல்லக்கிலும் இரவு யானை வாகனம் குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. 


ஏப்ரல் 8 தெப்பமும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன், திருவேங்கடத்தான், கண்ணன், ஸ்ரீ கிருஷ்ணன், தக்கார் அருணாதேவி கொம்பையா, அறங்காவலர்கள் மாரியம்மாள்  சண்முகசுந்தரம் முருகன், முத்து கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் கோபாலகிருஷ்ணன், சௌந்தரராஜன், காய்சினிவேந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad