தூத்துக்குடி மாவட்டம், ஏப்ரல் 05, வருகின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரின் (Static Surveillance Team) பணிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு.
வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை குழு (Flying Squad Team) மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் (Static Surveillance Team) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பணம் பட்டுவாடாவை தடுப்பதற்காக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று (04.04.2024) தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரின் (Static Surveillance Team) பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
No comments:
Post a Comment