காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரி செய்யக்கோரி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மண்டல பதிவு துறை துணை ஐ.ஜி.யிடம் மனு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 April 2024

காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரி செய்யக்கோரி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மண்டல பதிவு துறை துணை ஐ.ஜி.யிடம் மனு

 


காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரி செய்யக்கோரி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மண்டல பதிவு துறை துணை ஐ.ஜி.யிடம் மனு



தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளதாக பத்திரபதிவு செய்ய வரும் பயனாளிகளும். சமூக ஆர்வலர்கள். மற்றும் பத்திரபதிவு எழுத்தர்கள் கூறிய புகார்களை தொடர்ந்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு  தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி ஆலோசனையின்படி திருச்செந்தூர் தாலுகா ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சிந்திக் தலைமையில் ஆயுள் கால உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

அதனால் எந்தவித நடவடிக்கையும், தீர்வும் இதுவரை எடுக்கப்படாததால் நெல்லை மண்டல பத்திரப்பதிவு ஐ.ஜியிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு திருச்செந்தூர் தாலுகா ஒருங்கினைப்பாளர் அபுபக்கர் சித்திக் தலைமையில் ஆயுள்கால உறுப்பினர்கள் சேர்ந்து தங்களது கோரிக்கை மனுவை நேரில் கொடுத்தனர். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட நெல்லை மண்டல பத்திரப்பதிவு ஐ.ஜி 30.04.24 அன்று காயல்பட்டிணம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கள ஆய்வு செய்து அங்கு காணப்படும் குறைகள் இயன்றவரை சட்டத்திற்கு உட்பட்டு நிவர்த்தி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad