காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 15 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 April 2024

காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 15 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்!

 


காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 15 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்!



தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டணம் ஓடக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 15 லட்சம் மதிப்பிலான 80 மூட்டை பீடி இலைகளையம் படகையும்  க்யூ பிராஞ்ச் போலீசார் பறிமுதல் செய்தனர். 



கடந்த முயன்ற படகு அரசால் தடை செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட இன்ஜின் ஆகும்.   சம்பவம் தொடர்பாக மீனவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் பீடி இலைகள், கஞ்சா போன்ற போதை பொருட்கள் படகுகள் மூலம் இலங்கைக்கு அடிக்கடி கடத்தப்பட்டு  வருகிறது. அவ்வப்போது போதை பொருள் தடுப்பு போலீசார் ஆகியோர் சோதனை நடத்தி பீடி இலைகள் கஞ்சா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர் இந்நிலையில் காயல்பட்டினம் ஓடக்கரை கடற்கரையிலிருந்து பீடி இலைகள் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்த முயற்சி நடப்பதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து க்யூ பிராஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா, சப் இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், ஏட்டு ராமர், இருதயராஜகுமார்,  போலீசார் பழனி பாலமுருகன் ஆகியோர் காயல்பட்டணம் ஓடக்கரை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் திடீரென சோதனை மேற்கொண்டனர். 



அப்போது ஓடக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பதுங்கி வைக்கப்பட்டிருந்த தலா 30 கிலோ கொண்ட 80 மூட்டை பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. மேலும் சம்பவ இடத்தில் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் அந்தோணி துரை(40) என்பவரை கைது செய்தனர். மேலும் படகு, அதிலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட 40 ஆர்ட்ஸ் பவர் கொண்ட இன்ஜினை பறிமுதல் செய்தனர். 



பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என க்யூ பிராஞ்ச் போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad