நாசரேத், ஏப்ரல் 19, ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாமல் போன நாசரேத் பகுதி வாக்காளர்கள், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதால் அதிர்ச்சி அடைந்தனர்.
நாசரேத் பகுதியில் பாகம் எண் 13 உட்பட பல வாக்கு சாவடிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் விடுத்துள்ளது, இந்த விபரம் தெரியாமல் வாக்களிக்க வந்தவர்களை வாக்கு சாவடி அலுவலர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர். இது குறித்து ஏரல் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மேலும் இது போல பல வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்க பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது பற்றி மாவட்ட தேர்தல் புகார் அலுவலகம், +918903135086 என்ற எண்ணுக்கு பல முறை தகவல் தெரிவிக்க முயற்சித்த போது அதனை ஏற்க மறுத்து விட்டதால், மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.
No comments:
Post a Comment