ஏரல் வாக்கு சாவடி எண் 93 இல் மின்னனு வாக்கு இயந்திரம் கோளாறு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 19 April 2024

ஏரல் வாக்கு சாவடி எண் 93 இல் மின்னனு வாக்கு இயந்திரம் கோளாறு.

தூத்துக்குடி மாவட்டம், ஏப்ரல் 19,  ஏரல் வட்டம், ஏரல் வாக்கு சாவடி எண் - 93 இல் மின்னனு வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக காலை 7 மணிக்கு துவங்க வேண்டிய வாக்கு பதிவு சுமார் 1 மணி நேரம் தாமதமாக 8.15 க்கு தொடங்கியது.


இதனால் வாக்கு பதிவு மந்த நிலையில் இருந்து வந்தது. வாக்கு பதிவு செய்ய வந்த அலுவலர்களின் அஜாக்கரதையினால் நேரம் வீணடிக்கபட்டது. இதற்கான காரணம் என்ன என்று வினவியபோது போதுமான தேர்தல் அலுவலர்கள் இல்லை என்றும், அலுவலர்களின் மெத்தனப் போக்கே காரணமாக கூறப்பட்டது. 


மேற்படி வாக்கு சாவடியில் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். சிலர் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் கருதி திரும்பி சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad