மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் - வாக்குசாவடி மையத்திற்கு அழைத்து சென்று வர இலவச வாகன வசதி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 18 April 2024

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் - வாக்குசாவடி மையத்திற்கு அழைத்து சென்று வர இலவச வாகன வசதி.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்களிக்கும் பொருட்டு வாக்குசாவடி மையத்திற்கு அழைத்து சென்று வர இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது - 
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு.


தூத்துக்குடி மாவட்டத்தில் 19.04.2024 அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவரும் எளிதில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் பொருட்டு அவர்களது வீட்டிலிருந்து வாக்களிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று வர இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


எனவே, வாகன வசதி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவரும் சாக்க்ஷம் செயலி (SAKSHAM APP) அல்லது '1950" என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad