மக்கள் பயன்களை தடையின்றி பெற்று தர ஆட்சியருக்கு ஞானராஜ் நகர் மக்கள் கோரிக்கை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 18 April 2024

மக்கள் பயன்களை தடையின்றி பெற்று தர ஆட்சியருக்கு ஞானராஜ் நகர் மக்கள் கோரிக்கை.

நாசரேத், ஏப்ரல் 17, மூக்குபீறி ஊராட்சியில் மக்கள் பயன்களை தடையின்றி பெற்று கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு ஞானராஜ் நகர் மக்கள் சார்பில் எழுதியுள்ள மனுவில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் பணிவான கவனத்திற்கு இந்த புகார் மனுவில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் ஆடுமாடுகள் நீர் அருந்துவதற்கும் மனிதர்கள் குளிப்பதற்கும் அரசு திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் செலவில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது அவைகள் இன்று வரையும் மக்கள் பயன்பாட்டிற்கு உள்ளன ஆனால் விதிவிலக்காக ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் உள்ள மூக்குப்பீறி கிராமம் ஞானராஜ் நகரில் மேற்படி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி சமீப காலமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.


மூக்குப்பீறி ஊராட்சி மன்ற தலைவர் அவர்களின் வீட்டின் அருகே இந்த தண்ணீர் தொட்டி இருப்பதால் தனிப்பட்ட காரணங்களுக்காக தண்ணீர் தொட்டியையும் ஒரு குடிநீர் குழாயையும் முடக்கி வைத்துள்ளனர். இதனால் ஆடு மாடுகளும் ஏழை எளிய மக்களும் அவதிப்படுகின்றனர்.  அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர், இதனால் அரசின் உயர்வான நோக்கம் தடைப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் மத்தியில் தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சி நிர்வாகத்திற்கும் அவப்பெயர் உண்டாக்கும் நோக்கில் செயல்படும் மூக்குப்பீறி ஊராட்சி மன்ற நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் அரசு மக்களுக்காக செயல்படுத்திய திட்டத்தின் பயன்களை மக்கள் தடையின்றி பெற்றிட வழிவகை செய்ய வேண்டுமென தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

இப்படிக்கு.
சமூக ஆர்வலர்கள் மற்றும் ஞானராஜ் நகர் பொதுமக்கள் மூக்குப்பீறி கிராமம்

தேதி 16/4/2024 என அந்த மனுவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad