நாசரேத் திருமறையூரில் பெண்கள் ஐக்கிய சங்க பண்டிகை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 16 April 2024

நாசரேத் திருமறையூரில் பெண்கள் ஐக்கிய சங்க பண்டிகை

 


நாசரேத் திருமறையூரில் பெண்கள் ஐக்கிய சங்க பண்டிகை




நாசரேத் அருகே உள்ள திருமறையூர்  மறுரூப ஆலயத்தில் பெண்கள் ஐக்கிய சங்க பண்டிகையை முன்னிட்டு மாபெரும் பேரணி நடந்தது. சேகர தலைவர் ஜான் சாமுவேல்  தலைமை வகித்தார். சபை ஊழியர் ஸ்டான்லி ஜெபித்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி ஆலயத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது.  முன்னதாக பண்டிகையை முன்னிட்டு ஆலயத்தில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடந்தது. திருமறையூர் பெண்கள் ஐக்கிய சங்க தலைவி கோல்டா சாமுவேல் தேவ செய்தி கொடுத்தார்.பின்னர் பெண்கள் கூடுகை நிகழ்ச்சி நடந்தது.சாந்தினி கிளாட்ஸ்டன்   தேவ செய்தி கொடுத்தார். இதனை தொடர்ந்து பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.  


நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad