நாசரேத் - கல்லூரி வளாகத்தில் வாலிபர் மரணம் டி.எஸ்.பி விசாரணை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 16 April 2024

நாசரேத் - கல்லூரி வளாகத்தில் வாலிபர் மரணம் டி.எஸ்.பி விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம், ஏப்ரல் 16, நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வரும் காயல்பட்டினம் ஓடக்கரையை சேர்ந்த ஞானசேகர் என்பவருடைய மகன் அமுதன்.


இவர் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவர் மேற்படி கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தகவலறிந்த காவல் துறையினர் மரணம் குறித்து சாத்தான்குளம் டீஎஸ்பி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், அமுதன் உறவினர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு, அமுதன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad