தூத்துக்குடி அருகில் மதுபானத்திற்கு அதிக விலை கேட்டதில்தகராறு இருவருக்கு அரிவாள் வெட்டு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 20 April 2024

தூத்துக்குடி அருகில் மதுபானத்திற்கு அதிக விலை கேட்டதில்தகராறு இருவருக்கு அரிவாள் வெட்டு

 


தூத்துக்குடி அருகில் உள்ள முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்தவர் செந்தில்வேல் மகன் பிரேம்குமார் (19). இவர் நேற்று பொட்டல்காடு அருகில் ஒரு டீக்கடை முன்பு மதுபானம் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் பிரேம்குமாரிடம் மதுபானம் கேட்டார்களாம். அவர் கூடுதல் விலை சொன்னதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த 4 பேர் கும்பல் பிரேம்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்கள். 


இதை அருகில் இருந்த டீக்கடை நடத்தி வரும் முள்ளக்காடு காந்தி ஐஸ் பேட்டரி ரோட்டைச் சேர்ந்த ராமஜெயம் மகன் வேல்ராஜ் 45 என்பவர் தடுக்க முயன்ற போது அவரையும்  அறிவாளால் வெட்டி அவரது கடையில் இருந்த அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.


இதில் படுகாயம் அடைந்த பிரேம்குமார், வேல்ராஜ் ஆகிய இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அந்த 4 பேர் கும்பலை தேடி வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad