ஸ்ரீவைகுண்டம் ஏப்ரல் 20. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவ திருப்பதி தலங்களில் 9வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 12 கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டி நடைபெற்றது உற்சவர் பொலிந்து நின்றபிரான் காலை 7 மணிக்கு தேரில் எழுந்தருளினார். காலை 7.50:மணிக்கு கோவிந்தா கோபாலா கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் 10.31 மணிக்கு நிலைக்கு வந்தது. நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், அர்ச்சகர்கள் கண்ணன். விவேக். கோவில் செயல் அலுவலர் சதீஷ் அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம்(எ) கணேசன். உறுப்பினர்கள் கிரிதரன் செந்தில் குமார் காளிமுத்து ராமலட்சுமி முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் இன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.

No comments:
Post a Comment