நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் வியாபாரிகளுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபம்! நாளை நடைபெறுகிறது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 March 2024

நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் வியாபாரிகளுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபம்! நாளை நடைபெறுகிறது.


நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் வியாபாரிகளுக் கான ஆசீர்வாத உபவாச ஜெபம் நாளை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள நாலுமாவடி  மார்ச் 9 ஆம் தேதி நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வியாபாரம் மற்றும் தொழில் செய்கிறவர்களுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபம் நடைபெறுகிறது.

சிறு தொழில் செய்கிறவர்கள் முதல் பெருந்தொழில் செய்கிற வியாபாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியக் குழுவின சிறப்பு பாடல்கள் பாடுகின்றனர். தொழில் மற்றும் வியாபாரங்களில் ஆசீர்வாதங்களுக்காக தேவ செய்தி அளித்து விசேஷித்த ஜெபத்தை சகோ. மோகன் சி. லாசரஸ் ஏறெடுக்கிறார். கூட்டம் முடிந்ததும் அனைத்து ஊர்களுக்கும் செல்வதற்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் உடன் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


- நிக்சன், செய்தியாளர், நாசரேத்.

No comments:

Post a Comment

Post Top Ad