கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'உலக மகளிர் தின' கொண்டாட்ட விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 March 2024

கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'உலக மகளிர் தின' கொண்டாட்ட விழா.


கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை தாங்கினார். துணை முதல்வர் முனைவர் மகேஷ் குமார் முன்னிலை வகித்தார். படுக்கப்பத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லெட்சுமி சிறப்புரையாற்றினார். பெண்கள் உலகில் நிபந்தனையற்ற அன்பையும், அறிவையும், அள்ளிக் கொடுப்பதால் தான் இன்றும் போற்றப்பட்டும், வாழ்த்தப்பட்டும், வணங்கப்பட்டும் வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை என்பதை சிறப்பாக எடுத்துரைத்தார். 

இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி லிஷா ஸ்வீட்டி வரவேற்புரை வழங்கினார். மூன்றாமாண்டு கணினி பயன்பாட்டுத் துறை மாணவி சிமித்ரா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல் துறை மாணவி  முவேதா டென்சி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெண்கள் மேம்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர்  ஜாஸ்மின் பொன்மேரி  செய்திருந்தனர். தொடர்ச்சியாக பலவகையான ஆடல், பாடல், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 


இந்நிகழ்வை அனைத்துப் பேராசிரியர்களும், மாணவர்களும், மகிழ்ந்து கொண்டாடினார்கள். விழாவினை ஆங்கிலத்துறை மாணவிகள் பவித்ரா தேவி, தனலட்சுமி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.


- நிக்சன்,செய்தியாளர்,நாசரேத். 

No comments:

Post a Comment

Post Top Ad