தூத்துக்குடி மாணவர்கள் கணிதத்தில் உலக சாதனை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 March 2024

தூத்துக்குடி மாணவர்கள் கணிதத்தில் உலக சாதனை


தூத்துக்குடியைச் சார்ந்த மேஜிக் மேத் (Magic Math) மற்றும் பெங்களூரை சார்ந்த இன்னோவெடிவ் சொலுஷன்ஸ் (Innovative Solutions) இணைந்து நடத்திய கணிதத்த தொகைகள் தீர்க்கப்படுவதில் சுமார் 50 மாணவர்களை இணைந்து உலக சாதனை நிகழ்த்தியது. 

இதில் உலகில் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் இணையவழி மூலமாக சாதனைகளை நிகழ்த்தினர். மிகக் குறைந்த நிமிடத்தில் கை விரல்களை Finger Math முறையில் கணிதக் கணக்குகளை விரைவாகவும் துல்லியமாகவும் செய்து முடித்தனர். Worldwide Book of Records பெங்களூரை சார்ந்த உலக சாதனையாளர் மற்றும் Dream Catcher நிறுவனத்தின் தலைவர் திருமதி.சிந்துஜா வினித் நடுவராக இருந்து நிகழ்வை கண்காணித்து மாணவர்களை பாராட்டினார்.


நிகழ்ச்சி ஏற்பாட்டினை செல்வமணி சதீஷ் சிறப்பாக செய்திருந்தார். மேஜிக் மேத்தின் நிறுவனரும், தூத்துக்குடியில் 17 வருடமாக அபாகஸ்,வேதிக்மேத் பயிற்சி பயிற்றுநருமான ஆனந்தி தங்கசாமி,  தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கொடுத்து வருகிறார். அரசு பள்ளி மாணவர்கள் இவரிடம் இலவசமாக பயிற்சி பெற்று பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


- தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad