சொக்கலிங்கபுரத்தில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 March 2024

சொக்கலிங்கபுரத்தில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்.


தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சுற்றுப்புறச்சூழல் பிரிவு சார்பில்   மத்திய  அரசின் தனி நபருக்கான ரூ5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம், தொழிலாளர் நலவாரிய அட்டை மற்றும் விஸ்வகர்மா திட்டத்தில் வட்டியில்லா 1லட்சம் வீடுகளுக்கான சோலார் மானியம் பெறுவதற்கான சிறப்பு முகாம் சாத்தான்குளம் அருகே சொக்கலிங்கபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 


தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்து பொதுமக்களிடம் விண்ணப்பம் பெற்று  தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சித்திரைப்பாண்டி, மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ், மாநில இளைஞரணி  செயலர் பூபதிபாண்டியன், சாத்தான்குளம் மண்டல் தலைவர் சரவணன், மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் மகேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், ஆகியோர்  முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் மாவட்டத் தலைவர் சுரேஷ்ராஜா வரவேற்றார். தொடர்ந்து மத்திய  அரசின் சாதனை திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இம்முகாமில் பொதுமக்கள் பலர் விண்ணப்பம் மனு கொடுத்தனர். 


இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜபுனிதா,  லட்சுமி, மாவட்ட பிரச்சார பிரிவு துணைத் தலைவர் ஜோசப், மண்டல் பொதுச் செயலாளர்கள் ஜெயராஜேஷ், கணேசன்,  ஒன்றிய பொருளாளர் அகஸ்தீஸ்வரன்,  துணைத் தலைவர் பொன்ராஜவேல், ஒன்றிய செயலாளர்கள் திரவியவேல், குமாரவேல், சுபாவெங்கட், பொன்திரவியம், மாவட்ட சுற்றுச்சூழல் செயலாளர் கணேசஆதித்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  சுற்றுச்சூழல் மாவட்ட செயலாளர் பாலசுரேஷ் நன்றி கூறினார் .


- நிக்சன், செய்தியாளர், நாசரேத். 

No comments:

Post a Comment

Post Top Ad