கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட கனமழையால் தூத்துக்குடி.நெல்லை தென்காசி உட்பட பல்வேறு மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. இதில் திருச்செந்தூர் அருகேயுள்ள குளங்கள் உடைந்ததால் பரமன்குறிச்சி உடன்குடி பகுதிகளில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டது. இதில் வெள்ளாளன்விளை, வட்டன் விளை பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது இதில் வெள்ளான் விளை சாலைகள் உடனடியாக சரி செய்யப்பட்டது. ஆனால் பரமன்குறிச்சியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் உள்ள வட்டன் விளைகிராமத்தில் உள்ள சாலை இதுவரை சரி செய்யவில்லை சுமார் ஒரு கிலோமீட்டருக்குமேல் சாலை தண்ணீர் மூழ்கி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் இன்றுவரை உள்ளது.இது குறித்து வட்டன் விளை ஊர் மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், பஞ்சாயத்து தலைவரிடமும் பல்வேறு மனுக்கள் கொடுத்தும் இதுவரை வெள்ளநீரை வெளியேற்றி சாலையை சரி செய்ய எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை சாலையில் வெள்ள நீர் நான்கு அடி உயரத்திற்குமேல் தேங்கியுள்ளது.
இதனால் வட்டன் விளை ஊர் மக்கள் மற்றும் மாணவ மாணவிகள். பணிக்குச் செல்லுபவர்கள் ஐந்து கிலே சுற்றிச்சென்று வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. வட்டன் விளைகிராமத்தை மட்டும் புறக்கணிக்க. காரணம் என்ன மழை வெள்ளம் வந்து மூன்று மாதத்திற்குமேல் ஆகியும் மழைநீரை வெளியேற்றி சாலை சரிசெய்யாத வட்டன் விளைகிராமத்தை மட்டும் புறக்கணித்த மாவட்ட நிர்வாகத்தையும் பஞ்சாயத்தின் அலட்சியப் போக்கினையும் கண்டித்து வட்டன் விளைகிராமத்தினர் ஊர் பிரமுகர் கதிரேசன் முன்னிலையில் இந்து முன்னனி மாநில தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் பரமன்குறிச்சி நாகர்கோவில் நெடுஞ்சாலை வட்டன் விளைவிலக்கு ரோட்டில் ஆண்களும் பெண்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மண்டல துணை வட்டாச்சியர் காசிராஜன் நெடுஞ் சாலை த்துறை உதவிப்பொறியாளர் சிபின், இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீஸார் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட வட்டன்விளை ஊர்மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியானது. இதன் எதிரொளியாகசாலை அமைக்கும் பணி உடனடியாக நடைபெற்றது தண்ணீரில் முழ்கிய காலையில் கற்கள் கொண்டு கொட்டப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சாலையை சீரமைக்க முன்னின்று பேராட்டம் நடத்தி பணியை முடித்து தந்த மாநில இந்து முன்னணி தலைவர் வி.பி.ஜெயக்குமாருக்கு நன்றி தெரிவித்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment