தச்சன்விளை பள்ளியில் திறனாய்வுத் தேர்வு, போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 March 2024

தச்சன்விளை பள்ளியில் திறனாய்வுத் தேர்வு, போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா.


தச்சன்விளை அரசு பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வு மற்றம் வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசளிக்கப்பட்டது. 

சாத்தான்குளம்  அருகே தச்சன்விளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரிசர்வ் வங்கி நடத்திய நிதி சார் வினா வினாடி போட்டியில் மாணவர்கள் முத்துலட்சுமி, முத்துக்குமார் ஆகியோர் இரண்டாவது இடம் பெற்றனர்.  மேலும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் மாணவிகள் அபிதா, அஸ்வினி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பிளஸ்டூ படிக்கும் வரை ஆண்டுக்கு ரூ12 ஆயிரம் விதம் ரூ 48 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. 


இதனையொட்டி  வினாடி வினா போட்டி, திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. விழாவில் திசையன்விளை ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் குமரன்விளை  பி. ஏ.  பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு  வழங்கினார்.  


விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தொம்மைரெக்ஸ்லின், ஆசிரியர் மங்கலம், மற்றும் ஊர் பிரமுகர்கள் ஆனையன், மாயாண்டி, செல்வபாண்டி, முத்துக்கிருஷ்ணன், பள்ளி முன்னாள் மாணவன் சூர்யா உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.


- நிக்சன், செய்தியாளர் - நாசரேத்.

No comments:

Post a Comment

Post Top Ad