இதன்படி இடைச்சிவிளை மோடி நகரில் தரைநிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு அரசூர் ஊராட்சிக்குள்பட்ட பூச்சிக்காடு காலனி, எம்மாகிழவி விளை, ரெத்தினபுரி, குமரன்விளை, கலியன்விளை காலனி, தச்சன்விளை அண்ணாநகர், ஆகிய 6 கிராமங்கள் பயன்பெறும் குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 6மாதமாக இந்த குடிநீர் அரசூர் கிராமத்திற்கு வழங்கப்படவில்லை. இதனால் தண்ணீர் ஏற்றப்படாமல் இடைச்சிவிளை மோடிநகர் தரை நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சி பொருளாக உள்ளது. இதனால் இக்கிராம மக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆதலால் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு ஏரல் - உடன்குடி திட்ட குடிநீரை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அகில இந்து மகா சபா மாநில தலைவர் ஆர். எஸ். சுந்தரவேல் கூறுகையில்,. தண்ணீர் இருந்தும் தண்ணீர் கிடைக்காத நிலையில் அரசூர் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆதலால் உடனடியாக தண்ணீர் வழங்ககோரி வரும் 20 ஆம்தேதி இடைச்சிவிளை சாலையில் கிராம ம க்கள் சார்பில் காலி குடங்களிடன் தர்னா போராட்டம் நடத்திட உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நிக்சன், செய்தியாளர், நாசரேத்.

No comments:
Post a Comment