பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா ஆலயத்தில் தவக்கால சிறப்பு அசனம். திரளானோர் பங்கேற்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 3 March 2024

பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா ஆலயத்தில் தவக்கால சிறப்பு அசனம். திரளானோர் பங்கேற்பு.


பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண  மாதா ஆலயத்தில்  தவக்கால சிறப்பு அசனம்  சனிக்கிழமை  நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர். 

சாத்தான்குளம்  அருகே பொத்தகாலன்விளையில் பிரசித்தி பெற்ற புனித திருக்கல்யாண மாதா திருத்தலம் உள்ளது. இந்த  திருத்தலத்திற்கு தமிழகம் மட்டுமில்லாது  கேரளா, கர்நாடகா பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி 2வது சனிக்கிழமை தவக்கால சிறப்பு அசனம் நடப்பது வழக்கம். அதன்படி பொத்தகாலன்விளை புனித  திருக்கல்யாண மாதா  திருத்தலத்தில் தவக்கால 2வது சனிக்கிழமையான  மாலை சிறப்பு அசனம் நடைபெற்றது. 


அசனத்தை திருத்தல அதிபர் வெனிசுகுமார் ஜெபித்து தொடங்கி வைத்தார். இதில் சாத்தான்குளம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளானோர் பங்கேற்று அசனத்தை  சாப்பிட்டு, பாத்திரங்களில் வாங்கியும் சென்றனர். சிறப்பு அசனத்திற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் வெனிசு குமார் தலைமையில் பங்கு மக்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad