சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தட்டார்மடம் பகுதியில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் துண்டு பிரசுரம் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டது. சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குள்பட்ட சுப்பிரமணியபுரம், நடுவகுறிச்சி ஊராட்சிக்குள்பட்ட தட்டார்மடம் பஜார் பகுதியில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல், திமுக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை சொல்லி பிரச்சாரம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்து வீடுகள் தோறும் துணடு பிரசாரம் வழங்கினார். இதில் ஒன்றிய அவைத்தலைவர் ராஜபாண்டியன், சாஸ்தாவிநல்லூர் ஊராட்சித் தலைவர் திருக்கல்யாணி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தேவதாஸ், ஜோஸ், கிளை நிர்வாகிகள் நிர்மல் ரீகன், ஜோசப் ஆல்ட்டன் ,கணேச பாண்டி, சித்திரை, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment