மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 12 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 3 March 2024

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 12 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்


நாசரேத் அருகிலுள்ள மூக்குப் பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்  12 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்  மூக்குப்பீறி, பிரகாசபுரம், ஒய்யான்குடி, கச்சனாவிளை, புறையூர், நெய்விளை, இடையன்விளை, நாலுமாவடி, சுந்தர்ராஜபுரம், திருமலர்புரம், பணிக்கநாடார் குடியிருப்பு, வெள்ளரிக்காயூரணி ஆகிய 12 இடங்களில் நடந்தது. 

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சோனியா தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) பால் ஆபிரகாம், மூக்குப்பீறி தூயமாற்கு மேல்நிலைப்பள்ளி தாளாளர் செல்வின் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். சுகாதார ஆய்வாளர் ஜான் முன்னிலை வகித்தார். இதில் 948 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad