தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை மற்றும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து நடத்திய மரம் நடுவிழா திருமறையூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சினாடுமாமன்ற சுற்றுச் சூழல் கரிசனைத்துறை இணை இயக்குனர் ஜான் சாமுவேல் கலந்து கொண்டு மரங்கள் நட்டினார்.
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், நாட்டு நலப்பணித் திட்ட இயக்குனர் லிவிங்ஸ்டன், பேராசிரியர்கள் மர்காஷியஸ் சாமுவேல்ராஜ், லவ்சன், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கும் மற்றும் கூடியிருந்த பொது மக்களுக்கும் இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மரங்கள் வளர்ப்பதின் முக்கியத்துவம் குறித்து ஜான் சாமுவேல் சிறப்புரை ஆற்றினார்.
இவர்களுடன் திருமறையூர் சேகரம் மறுரூப ஆலய திருச்சபையின் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெயபால், தேவதாஸ், முதியோர் இல்ல பொறுப்பாளர் வனமோகன்ராஜ், சர்ச்சில், மற்றும் முதியோர் இல்லத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் பங்கு பெற்றனர்.
- நிக்சன் செய்தியாளர் நாசரேத்.

No comments:
Post a Comment