நாசரேத் அருகே ஸ்ரீனிவாச அறக் கட்டளை சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப் பட்டது. நாசரேத் அருகில் உள்ள தேமான்குளம்ஊராட் சிக்குட்பட்ட முதலைமொழி கிராமத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.தேமான்குளம் ஊராட்சிக்குட்பட்ட மகளிர் குழுக்கள் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீனிவாச அறக்கட்டளை நிர்வாகி நந்திகோபால் விழாவினை தொடங்கி வைத்தார்.
விழா வில் மக்களுக்கு தொழில் தொடங்கவும், வாழ்க்கைத் தரத்தை மேப்படுத்திடவும் சிறப்பான அறிவுரை வழங் கப்பட்டது.மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்க்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண் டாடினர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வழக் கறிஞர் நீலமேகம், அக்னி மாரி, ஸ்வேதா, அருள்ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- நிக்சன், செய்தியாளர், நாசரேத்.

No comments:
Post a Comment