நாலுமாவடியில் வியாபாரம், தொழில் செய்கிறவர்களுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபம்! திரளானோர் பங்கேற்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 9 March 2024

நாலுமாவடியில் வியாபாரம், தொழில் செய்கிறவர்களுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபம்! திரளானோர் பங்கேற்பு.


நாலுமாவடியில் நடந்த வியாபாரம் மற்றும் தொழில் செய்கிறவர்களுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபம் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வியாபாரம் மற்றும் தொழில் செய்கிறவர்களுக்கான  ஆசீர்வாத உபவாச ஜெபம் காலை 9 மணி முதல்  மாலை 3 மணி வரை  நடந்தது.

இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடினர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தேவசெய்தி கொடுத்து, தொழில் மற்றும் வியாபாரங்களின் ஆசீர்வாதங்களுக்காக விசேஷித்த ஜெபத்தை நடத்தினார். கூட்டம் முடிந்ததும் அனைத்து ஊர்களுக்கும் திரும்ப செல்வதற்கு  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் திரும்பி செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இனிவரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது வண்ணம் போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர்.


ஆசிர்வாத ஜெபத்தில்  திருநெல்வேலி,  தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வியாபாரிகள், தொழிலதிபர்கள்  திரளானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில்  ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.


- நிக்சன், செய்தியாளர், நாசரேத்.

No comments:

Post a Comment

Post Top Ad