திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தமிழக மாணவர் இயக்கம் சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 9 March 2024

திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தமிழக மாணவர் இயக்கம் சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம்.


சொத்து வரியை குறைக்காத, மற்றும் மாமன்ற கவுன்சிலர்களின் தீர்மானத்தை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தமிழக மாணவர் இயக்கம் சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம். 

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் நோட்டீஸ் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கூடுதல் சொத்து வரியை நிர்ணயம் செய்ததற்கு நீதிமன்றத்தின் மூலம் சொத்து வரியை ராஜபாளையம் நகராட்சி ஆணையர் குறைத்தார்.


ஆனால் திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகமோ உயர் நீதிமன்றம் அரசாணை 52/2022 இன் படி சொத்து வரியை நிர்ணயம் செய்ய நகராட்சி ஆணையர் பரிசீலிக்க உத்தரவிட்டது. ஆனால் நமது நகராட்சி ஆணையாளரோ தினமும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆட்களை அனுப்பி மக்களை மிரட்டி கட்டாய வரி வசூல் செய்கிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதனை கண்டித்து மக்கள் அனைவரும் ஒன்று கூடி வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டுகிறோம் என தமிழக மாணவர் இயக்கம் சார்பில் திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளில் துண்டு சீட்டு பிரசாரம் செய்தனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.


Reporter Antony Raja Tuty, [09-03-2024 21:40]

 

No comments:

Post a Comment

Post Top Ad