நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்புரை ஆற்றினார். இம்முகாமிற்கு நாசரேத் காவல் ஆய்வாளர் ஜீன்குமார் தலைமை வகித்து மது மற்றும் போதை விழிப்புணர்வு பற்றிய தலைமை உரையாற்றினார். இந்நிகழ்வில் கல்லூரி மாணவ, மணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளரும், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் மற்றும் துறைத்தலைவர்கள் செய்திருந்தனர்.
- நிக்சன், செய்தியாளர் நாசரேத்.

No comments:
Post a Comment