இந்நிகழ்ச்சிக்கு நாசரேத் பேரூர் கழக செயலாளர் ஜமீன்சாலமோன் தலைமை தாங்கினார். நகர அவைத் தலைவர் கருத்தையா, நகர துணைசெயலாளர் ஜேம்ஸ், மாரிமுத்து ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துணை அமைப்பாளர் பாக்கியராஜ் திமுக கொடியை ஏற்றி வைத்தார். மேலும் பிரகாசபுரம், கே.வி.கே சாமி சிலை, பேரூந்து நிலையம், சந்தி ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.அதன் பின் திருமறையூர் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.
பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மூக்குபேறி கிளை செயலாளர் அருள், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ், நகர தொழில்நுட்பஅணி அமைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளார் செல்லத்துரை, மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன், முன்னாள் மாவட்ட சிறுபாண்மை அமைப்பாளர் மாமல்லன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைப்பாளர் பேச்சி முத்து, ஒன்றிய அவைத் தலைவர் மகரபூசனம், சேதுக்குவாய்த்தான் கிளை செயலாளர் சோலை நட்டார், வார்டு செயலாளர்கள் உடையார், சரவணன், இளங்கோ, தேவதாசன், மனோகரன், ஜெபகிருபை, ஜெபசிங், ஸ்டீபன் ஞான துரை, சிலாக்கியமணி, ஜாண் பென்சன், டேவின் சாலமோன், யெகோவா கான், ஒன்றிய பிரதிநிதிகள் ஹரிஸ்ரவி, ஞானராஜ், தேவ், ராமச்சந்திரன், மாணிக்கராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் பிரதிப், கிதியோன், வின்சுவா, வார்டு பிரதிநிதிகள் அப்பாத்துரை, கிருஷ்ணகுமார், சேகர், ஏசாதுரை ஜோசப், எமர்சன், திருமணி, சாமுவேல், ஸ்டான்லி, பரந்தாமன், சுந்தரம், சதாசிவம், ஜோதிராஜ், பிரகாசபுரம் எம்.ஜி.ஆர், நீல்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாசரேத் நல்ல சமாரியன் மனநலம் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டன. இதில் மாவட்ட திமுக பிரதிநிதிகள் கலையரசு, தாமரை செல்வன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பாக்கியராஜ், ஊராட்சி செயலாளர் நட்டார், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாமுவேல், அதிசயமணி, லிடியா, ஜெயா, வார்டு செயலாளர்கள் ஸ்டீபன், ஜெரின் மற்றும் பால்ராஜ், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment