தேசிய திறனாய்வுத் தேர்வில் பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேசிய திறனாய்வு போட்டித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய திறனாய்வு தேர்வு எழுதிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் மாணவர்கள் சூர்யா, சிவமகாகணபதி, சுதா ஆகிய 3 மாணவர்கள் தேர்ச்சி பெற்று கல்வி உதவி தொகை பெறுவதற்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் ஆழ்வார்திருநகரி வட்டாரக்கல்வி அலுவலர்கள் பெனிஸ்கர், செல்வி பள்ளி தலைமை ஆசிரியர் இம்மானுவேல், ஆசிரியர்கள் பாலன், சுவாமிதாஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவர் ஸ்ரீதர், உப தலைவர் சுந்தராஐன், சங்கர் கல்வி நிறுவனத்தினர் வீரமுருகப்பெருமாள், பாலகிருஷ்ணன் ஸ்ரீநிவாச அறக்கட்டளை சேர்ந்த நந்தகோபால், சுவேதா, இசக்கி முத்து மற்றும் உதவி ஆசிரியர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
.jpg)
No comments:
Post a Comment