நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 1 March 2024

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா.


நாசரேத்  மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் சுதாகர் தலைமை வகித்தார் தூய யோவான் பேராலய தலைமைகுரு  ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார் .பள்ளி பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்களை பாடினர்.. இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ்  வரவேற்றார்.  தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் ஆண்டறிக்கை  சமர்ப்பித்தார். பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ரத்தினகுமார் வாழ்த்திப் பேசினார்.

பத்தாம், பதினொன்றாம் மற்றும் 12ம் வகுப்பில் சிறப்பிடத்தை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதையடுத்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. நிகழ்ச்சிகளை தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு தொகுத்து வழங்கினார். 


இதில்  பழைய மாணவர் சங்க தலைவர் ரூபன் துரைசிங் மற்றும் ஆசிரியர்கள்,  அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் சேகர் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad