தூத்துக்குடி மாவட்டம், மார்ச்.02, ஏரல் நகரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
ஏழை, எளியோருக்கு விலையில்லா தையல் இயந்திரம், நலிந்தோர்க்கு வேட்டி, சேலை என பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏரல் நகர திமுக செயலர் சார்பில், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
ஏற்பாடுகளை நகர செயலாளர் ராயப்பன் செய்திருந்தார், இந்நிகழ்வில் ஏரல் பேரூராட்சி தலைவி ஷர்மிளா மணிவண்ணன், உமரி சங்கர் மற்றும் திமுக பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment