சாத்தான்குளம் பேரூராட்சியில் மொத்தம் ஒன்பது சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகலூரை ஒட்டிய கிராமப் பகுதிகளில் 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சாத்தான்குளம் ஸ்டீபன் துவக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமினை பேரூராட்சி மன்ற தலைவர் ரெஜினா ஸ்டெல்லா பாய் துவக்கி வைத்தார்.
சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் வரவேற்றார். மருத்துவ அலுவலர்கள் ஐலின் சுமதி, டாக்டர்.ஸ்வீட்லின் சசிதா,டாக்டர்.குருசாமி டாக்டர்.ரெய்சா, ஸ்வாதி டாக்டர்.அருள்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம், பகுதி சுகாதார செவிலியர் பேச்சியம்மாள், கோமதி,சமுதாய சுகாதார செவிலியர் மேரி செல்வி, சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் ஆகியோர் மேற்பார்வை பணிவுகளை செய்தனர்.
சுகாதார ஆய்வாளர் அருண் நன்றி கூறினார். சொட்டு மருந்து வழங்கும் முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள், மற்றும் தன்னார்வலப் பணியாளர்கள் பங்கு பெற்றனர்.

No comments:
Post a Comment