தூத்துக்குடி மாவட்டம், மார்ச் - 03, ஸ்ரீவைகுண்டம், நவதிருப்பதி கோவில்களில் இரண்டாம் கோயில் நத்தம் மாசி பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடந்தது.
இன்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 8 மணிக்கு திருமஞ்சனம். திருவாராதனம். பின்னர் 9 மணிக்கு உற்சவர் எம்இடர்கடிவான் தாயார் களுடன் கருடன் சன்னதி முன் எழுந்தருளினார்.
பின்னர் கொடி பட்டம் பூஜை நடந்தது. 11.00 மணிக்கு கொடிப்பட்டம் மாட வீதி சுற்றி வந்தது. 11.40 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
திருவிழாவை முன்னிட்டு தினசரி மாலை 6.30 மணிக்கு ஹம்ஸ வாகனம், சிம்ம வாகனம், ஹனுமன் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், சந்திரபிரபை வாகனம், பரங்கி நாற்காலி, குதிரை வாகனம், வெற்றி வேர் சப்பரம் ஆகிய வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.
கொடிபட்டம் ஏற்றப்பட்ட பின் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. தினமும் மாலை 6 மணிக்கு சாயரட்சை. 6-30 மணிக்கு எம் இடர் கடிவான் வாகன குறட்டிற்கு எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அர்ச்சகர்கள் கண்ணன், ராஜகோபாலன் வாகனத்தில் அலங்காரம் செய்திருந்தனர், இந்நிகழ்வில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன், கண்ணன், ஸ்ரீ கிருஷ்ணன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் தமிழ்ச்செல்வி, ஆய்வாளர் நம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment