சாத்தான்குளம் அரசு நூலகத்தில் இரும் பெரும் விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 4 March 2024

சாத்தான்குளம் அரசு நூலகத்தில் இரும் பெரும் விழா.


சாத்தான்குளம் இராமகோபாலகிருஷ்ண பிள்ளை அரசு கிளை நூலகத்தில் வாசகர் வட்டம், 14வது வார்டு  இல்லம் தேடி கல்வி  சார்பில்  உலக அறிவியல் தினம், புரவலர் சேர்க்கை நிகழ்வு  நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு வாசக வட்ட தலைவர்   ஓ.சு. நடராஜன் தலைமை  வகித்தார். வழக்குரைஞர் வேணுகோபால் முன்னிலை வகித்தார். புனித வளனார் பெண்கள் பள்ளி  பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பவுலின்  வரவேற்றார். இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி, அறிவியல் வளர்ச்சி பற்றி மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியின்  மூலம்  புதிய நூலக புரவலர்களாக  அமெரிக்கா  தொழிலதிபர் தோப்புவளம்  தங்கபாண்டி ஸ்ரீதர், மாவட்ட பாஜக ஆன்மிக பிரிவு செயலர் பண்டாரபுரம் ராஜபாண்டியன்   ஆகியோர்  இணைத்துக் கொண்டனர்.  


இதில்  ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், ஒய்வு பெற்ற பள்ளி எழுத்தர் பிரேம்குமார், வியாபாரிகள் சங்க செயலாளர் மதுரம் செல்வராஜ் யோகா ஆசிரியர்கள் ராஜலட்சுமி, கமலம், அஞ்சலக அதிகாரி லெனின் முருகன் ஆகியோர்  சிறப்புரையாற்றினர். இதில்  அறிவியல் வினா-  விடை கேள்வியில் பதிலளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் நூலகர் சித்திரைலிங்கம், நூலக பணியாளர் மைக்கேல்ராஜா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூலகர் இசக்கியம்மாள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad