தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மார்ச் 22ஆம் தேதி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 4 March 2024

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மார்ச் 22ஆம் தேதி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டம்


சிறுபான்மை ஆர்.சி.பள்ளிகளில் பணிநிரவல் மாறுதல் மற்றும் பதவி உயர்வு அளித்தவர்களுக்கு ஒப்புதல் வழங்காமல் 18 மாதங்கள் ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வலியுறுத்தி 22.03.2024 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம்  நடத்திட உள்ளதாக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட  செயற்குழு கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டது. 

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்டக்கிளையின் செயற்குழுக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சு.செல்வராஜ் தலைமை  வகித்தார்.மாவட்டச் செயலாளர் மா.கலை உடையார், மாநிலச் செயற்குழு உறுப்பினர் தே.அண்டனி சார்லஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


கூட்டத்தில்  சிறுபான்மை ஆர்.சி.பள்ளிகளில் பணிநிரவல் மாறுதல் மற்றும் பதவி உயர்வு அளித்தவர்களுக்கு ஒப்புதல் வழங்காமல் 18 மாதங்கள் ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வலியுறுத்தி 22.03.2024 அன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்திடவும்,10.03.2024 அன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு சார்பாக திண்டுக்கல்லில்  நடைபெறவிருக்கும் மகளிர்தினக் கருத்தரங்கில் மாவட்ட பெண் உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்வதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கூட்டத்தில் மாநில, மாவட்ட, கல்விமாவட்ட,  வட்டார மற்றும் நகரப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். மாவட்டப் பொருளாளர் கோ.ஜெயசீலி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad