தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறையின் தலைவராக விஜிலா சத்யானந்த் தேர்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 March 2024

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறையின் தலைவராக விஜிலா சத்யானந்த் தேர்வு.

திருநெல்வேலி மாவட்டம்,  மார்ச் 5, சிறுபான்மையினர் நலன் கருதி, கிருத்துவ தேவாலங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்துக்கான தலைவர் துணைத் தலைவர், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை தேர்வு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


கிருத்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக பொருளாதார கல்வி மேம்பாட்டிற்கான நல வாரியம் புதிதாக அமைக்கப்படுவதற்கு நிர்வாக ஒப்புதல் ஆணையிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையின்படி மேற்படியின் நல வாரியத்தின் உறுப்பினர் செயலராக சிறுபான்மையினர் நல இயக்குனரை நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட்டது.


கிருத்துவ நல வாரியத்தில் பதிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வழிமுறைகள், உறுப்பினர்கள் பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள், விண்ணப்பிக்கும் முறை ஆகியன வெளியிடப்பட்டுள்ளது.


மேற்படி நல வாரியத்தின் தலைவராக திருநெல்வேலியை சார்ந்த முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad