தேசிய திறனாய்வுத் தேர்வில் சாத்தான்குளம் புலமாடன் பள்ளியில் 7 மாணவ, மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 4 March 2024

தேசிய திறனாய்வுத் தேர்வில் சாத்தான்குளம் புலமாடன் பள்ளியில் 7 மாணவ, மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர்.


கடந்த ஆண்டு கல்வி ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சாத்தான்குளம்  டிஎன்டிடிஏ ஆர்.எம்.பி  புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு எழுதிய  தனஸ்ரீ, மகாலட்சுமி, ஹரிதா, முத்து அபிஷேஷ்குமார், முத்துபிரியா, மாரிஸ்ரீ, சரவணன் ஆகியோர்  7  மாணவ, மாணவிகள்  தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும்   பயிற்சி  அளித்த  ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் டேவிட் வேதராஜ், தலைமையாசிரியர் ஜெபசிங் மனுவேல், சிஎஸ்ஐ ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரி தாளாளர் காந்திராஜன் மற்றும், ஆசியர்கள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், ஊர் பொதுமக்கள்  பாராட்டினர். 

No comments:

Post a Comment

Post Top Ad